
Malaysia
சாலை தடுப்பை மோதிய கார். உதவி கரம் நீட்டிய பாசிர் பூத்தே போலிஸ்காரர்கள்
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.17-
பொது மக்களையும் அமலாக்க தரப்பு போலிஸ்க்காரர்களையும் பிரிக்க முடியாது எனும் தாரக மந்திரத்தை
பின் பற்றும்
வகையில் பாசிர் பூத்தே போலிஸ் நிலைய போலிஸ்காரர்கள்
மெய்ப்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாசிர் பூத்தே பிரதான சாலையின் தடுப்பு
காங்கிரிட்டை கார் ஒன்று மோதி தொடர்ந்து நகர முடியாமல் இருந்தது.
கோலாலம்பூர் நோக்கி செல்ல வேண்டிய கார் தனது பயணத்தை தொடர பாசிர் பூத்தே போலிஸ் நிலைய போலிஸ்க்காரர்கள் உடனே அவ்விடம் வந்தடைந்து காரை பழுது பார்த்து பயணத்தை தொடர உதவிய
சூழலை நேரில் பார்த்த பொது மக்கள் மெய்சிலித்து போனார்கள்



