
எந்தக் கொம்பனாலும் டத்தோஸ்ரீ சரவணனை அசைக்க முடியாது எனக்குத் அவர்தான் துணைத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், ஏப்.18-
எனக்கு டத்தோஸ்ரீ சரவணன்தான் துணைத்தலைவர். அதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் சூளுரைத்துள்ளார்.
நாட்டில் எத்தனையோ விவகாரங்கள் இருக்கும் பட்சத்தில் மஇகாவின் தேர்தல் குறித்து கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் சிலர் பேசி வருகின்றனர். இதில் குறிப்பாக ஆதரவு கேட்டதாகவும் கூறுகின்றனர். யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும். அது குறித்து எனக்கு கவலை இல்லை.
ம.இ.கா தேசியதுணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்தான். அவர்தான் எனக்கு துணைத்தலைவர் என்று ம.இ.கா மத்திய செயலவை கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
என்னை பொருத்த வரையில் நான் யாரிடமும் சென்று ஆதரவு கேட்கவில்லை. ஆதரவு கேட்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. கையால் ஆகாதவன்தான் ஆதரவு கேட்பான். எனக்கு அப்படியெல்லாம் தேவையில்லை என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மஇகா கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மற்ற பதவிகளுக்கு எல்லாம் போட்டியிருக்கலாம். ஆனால்,
நான் இருக்கும் வரை டத்தோஸ்ரீ சரவணன்தான் என் துணைத் தலைவர். இதை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இது குறித்து நான் வெளிப்படையாகவே சவால் விடுகிறேன்.
கட்சியில் இல்லாதவர்கள் எல்லாம் மஇகாவை பற்றி பேசுவதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மஇகா மத்திய செயலவைக் கூட்டம் ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற வேளையில் செய்தியாளர் சந்திப்பில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.



