IndiaMalaysia

பிரிக்பீல்ட்ஸ்சில் ஐந்தடியில் அனாதையாக நின்ற இந்திய பிரஜை கண்ணன் சுப்பையா ஏப்ரல் 22இல் திருச்சிக்கு பயணிக்கு அவரக ஏற்க மறுத்த மனைவி மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் Dr த.கமலநாதன் மாவட்ட ஆட்சியர் மூலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ரேவதி குணாளன், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஏப்.18-

பிரிக்பீல்ட்ஸ்சில் ஐந்தடியில் அனாதையாக நின்ற இந்திய பிரஜை கண்ணன் சுப்பையாவை தமிழ்நாட்டிற்கு திரும்ப அனுப்ப மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் Dr த.கமலநாதன் உதவி வழங்கியுள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு செர்டாங்கில் உள்ள ஒரு உணவகத்தில் 60 வெள்ளி நாள் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த தமிழ்நாடு, தேவகோட்டை மாவட்டம், சிவகங்கை செங்கற்கோயில், சொக்கநாதபுரம் எனுமிடத்தை சேர்ந்த கண்ணன் உடல்நிலை பிரச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறியதாக கமலநாதன் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரையில் வேலை செய்து வந்ததாகவும் இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் நீரிழிவு நோய் காரணமாக காலில் புண் ஏற்பட்டு பார்க்க ஆள் இல்லாமல் பிரிக்பீல்ட்ஸ்சில் ஐந்தடியில் படுத்து கிடந்ததாகவும் பொதுமக்கள் சிலர் தம்மிடம் தகவல் தெரிவித்ததாகவும் கமலநாதன் சொன்னார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது கண்ணன் மிகவும் மோசமான நிலையில் ஐந்தடியில் படுத்து கிடந்தார். அவரை சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்குப் பிறகு குடிநுழைவு துறைக்கு சென்று நன்நெஞ்சர் சிவா உதவியில் அபராத தொகையை செலுத்தி தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக கமலநாதன் கூறினார்.

கண்ணன் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு ஏர் ஆசியா விமானம் மூலம் திருச்சி பயணிக்கவிருக்கும் நிலையில் அவரது மனைவி அவரை ஏற்க மறுத்து விட்டார். கண்ணனுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் அவரை அவரது பெற்றொரிடம் ஒப்படைந்துவிடும்படி இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அவர் தம்மிடம் கூறியதாக கமலநாதன் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும் அவர்கள் மூலம் குடுத்பத்தாரிடம் ஒப்படைக்கவிருப்பதாக கூறிய கமலநாதன், கண்ணனை திட்டமிட்டபடி ஏப்ரல் 22ஆம் தேதி திருச்சிக்கு அனுப்பி வைக்கவிருப்பதாக மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் Dr த.கமலநாதன் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button