
போர்ட் கிள்ளான் சுங்கை கெலாடிதேவி சொக்கோயில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம்!
கிள்ளான், ஏப்ரல் 16 போர்ட் கிள்ளான் சுங்கை கெலாடியில் அருள் பாலித்து கொண்டிருக்கும்
தேவி சொக்கோயில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் ஸ்ரீ மீனாட்சி சுந்தேரேஸ்வர் திருக்கல்யாணம் வைபவம் மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.

மலேசிய குருக்கள் சங்கத்தின் தலைவர் சங்க குல திலகம் சிவஸ்ரீ நா. பிரகநாதன் குருக்கள், ஆலய பிரதான குருக்கள் சிவஸ்ரீ இ.க.உமாசுதன் குருக்கள் ஆகிய இருவரின் தலைமையில் இந்த திருக்கல்யாண வைபவம் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
இந்த திருக்கல்யாணம் நடைபெற உதவி செய்த பக்த பெருமக்கள், உபய காரர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் சந்திரன் மற்றும் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த திரு கல்யாண வைபத்தைக் காண பக்தர்கள் திரளாக வருகை தரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



