Malaysia

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம் இரண்டாண்டில் சிறந்த சேவையை வழங்கியுள்ளது… நிவாஸ் ராகவன் பொருத்தமான தலைவர், சிறந்த சேவையாளர்… சேவையாளருக்கு ஆதரவு தாருங்கள்

தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஏப்.18-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த வர்த்தக சங்கமாக திகழும் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனம் கடந்த இரண்டு ஆண்டில் சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளது.

வர்த்தக சங்க உறுப்பினர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வரும் சங்கத்தின் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவன் சிறந்த சேவையாளர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ள அதன் நடப்புத் தலைவர் நிவாஸ் ராகவன் வர்த்தக சங்கத்திற்கு பொருத்தமான தலைவர் என்று தேசம் மேற்கொண்ட அதிரடி அலசலில் தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தில் கடந்த காலத்தில் நிறைய சேவைகளை மேற்கொண்டுள்ளார். வர்த்தக சங்கத்திற்கு அவரது சேவை அலப்பரியது. இந்திய வர்த்தகர்கள் குறிப்பாக சங்க உறுப்பினர்கள் எதிர்நோக்கியுள்ள தொழிலாளர் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு தீர்வு கண்டுள்ளார்.

அதேநேரத்தில் நதியமைச்சுடன் அணுக்கமான உறவு கொண்டு நிதியுதவி, கடனுதவி உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தித் தந்துள்ளார். இந்திய வர்த்தகர்கள் அரசாங்க துறையில் எந்தெந்த வாய்ப்புகளை பெற முடியும் என்பதை கண்டறிந்து சங்க உறுப்பினர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். SME வங்கியில் இருக்கும் வர்த்தக கடனுதவி வாய்ப்புகளை கண்டறிந்து சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இத்தகைய சேவைகளை முன்னிறுத்தி KLSICCI வர்த்தக சங்க தலைவர் பதவியை தற்காத்து கொள்ள போட்டியிடும் நிவாஸ் ராகவன் அடுத்த இளைஞர் தலைமுறைக்கு ஏற்ற தலைவர் என்று துணிந்து கூறலாம்

நிவாஸ் ராகவன் குறிப்பிட்ட சில வர்த்தக சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இதில் FMBA வர்த்தக சங்கத்தில் உதவி தலைவராக பணியாற்றியுள்ளார். KLSICCI வர்த்தக சங்கத்தில் தலைமை செயலாளர், உச்சமன்ற உறுப்பினராக இருந்து சேவையாற்றியுள்ளார். ஒரு சில வர்த்தக சங்கங்களில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். Multi Media பல்கலைக்கழகத்தில் இஞ்ஜினியரிங் துறையில் தொலைதொடர்பு சிறப்பு கல்வியை முடித்துள்ளார்.

ஒரு வர்த்தகராக மட்டுமில்லாமல் விளையாட்டு துறையிலும் 1998 தொடங்கி 2002ஆம் ஆண்டு வரையில் புருணை, வியட்னாம், கோலாலம்பூர், சபா, பினாங்கு, சிலாங்கூர் ஆகிய நாடுகள் மற்றும் மாநிலங்களில் நடைபெற்ற தைக்குவாண்டோ விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் நிவாஸ் ராகவன்.

இந்நிலையில் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் 96ஆவது ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆண்டு என்பதால் இந்த ஆண்டுக் கூட்டம் சூடிப்பிடித்துள்ள நிலையில் ஏப்ரல் 18ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறள்ளது.

இந்த வேளையில் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவன் தனது தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடுகிறார். இவரது அணியில் குமரகுரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்துள்ள நிவாஸ் ராகவன் இந்த தேர்தலில் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தொழிலாளர் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்
அரசாங்கத்தின் நிதியுதவிகள் இந்திய வணிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிவாஸ் ராகவன் உறுதியளித்துள்ளார்.

இந்திய சமுதாயத்தில் அதிகமான வணிகர்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிவாஸ் ராகவன் மேலும்
பல திட்டங்களையும் இலக்குகளையும் கொண்டு வந்துள்ளார். துடிப்புமிக்க, நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நிவாஸ் ராகவன் சமுதாய கடப்பாடு கொண்ட ஒரு வர்த்தகராவார். ஆற்றல், திறமை, தனித்துவம் கொண்ட நிவாஸ் ராகவன் மீண்டும் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் தலைவராக வெற்றி பெறுவதற்கு சங்க உறுப்பினர்கள் அவர் தலைமையிலான அணிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button