
சுங்கை சிப்புட் எல்பில் தோட்ட ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய ஆனித் திருமஞ்சன திருவிழா சிறப்பாக நடந்தேறியது
சுங்கை சிப்புட் எல்பில் தோட்ட ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய ஆனித் திருமஞ்சன திருவிழா சிறப்பாக நடந்தேறியத

சுங்கை சிப்புட், ஜூலை 4-
சுங்கை சிப்புட் எல்பில் தோட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலய ஆனித் திருமஞ்சன திருவிழா சிறப்பாக நடந்தேறியது.
இந்த ஆனித் திருமஞ்சன திருவிழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக வந்து அம்மனைத் தரிசித்தனர்.
ம.இ.காவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் ஆலயத்திற்கு 5000 வெள்ளி நன்கொடையாக வழங்கினார்.
தான்ஶ்ரீ அவர்களின் பிரதிநியாக ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி தலைவர் திரு. வீ. சின்னராஜு பி.பி.என் அவர்கள் கலந்து சிறப்பித்தார். உடன் தொகுதியின் செயலாளர் திரு. கு. உமாபதி அவர்களும் கலந்து கொண்டார்.
ஆலயத் தலைவர் திரு. நாகராஜன் கிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் திரு. ஹரிதாஸ் குணசேகரன் ஆகியோர் ம.இ.காவின் தேசியத் தலைவர் தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் ஆலயத்திற்கு நன்கொடை வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இத்திருவிழா சிறப்பாக நடந்தேற எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி நல்கினார்.



