
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ் மாநாட்டில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை நிகழ்த்தினார் அங்கீகார விருதும் வழங்கப்பட்டது
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ் மாநாட்டில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை நிகழ்த்தினார்
அங்கீகார விருதும் வழங்கப்பட்டத

வாஷின்டன், ஜூலை 4-
வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் பேரமைப்பின் 38-ஆவது தமிழ் மாநாடு Raleigh மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிலையில் மாநாட்டின் முதல் நாளில் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ ஐம்.சரவணன் முக்கிய உரை நிகழ்த்தியுள்ளார்.
இந்த FiTEN – FeTNA International Tamil Entrepreneur Summit, உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாடு தொடக்க நிகழ்வுடன் தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து திரண்டுள்ள நமது சமுதாயத்தின் திறமைமிக்க தொழில்முனைவோர், பார்வையாளர்கள், நவீன சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டை ஒரு உலகத் தரத்திலான தீர்வுகளை உருவாக்கும் தளமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
நாளைய தலைமுறை எதிர்கொள்ளும் மாற்றங்கள், சவால்கள் எதுவாக இருந்தாலும், நமது பாரம்பரியத்தையும், மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்வைத்து, தொழில் முனைவோர்களின் மூலமாக நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என்றார் டத்தோஸ்ரீ சரவணன்.
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்.
உலகம் முழுவதும் இருந்து திரண்டுள்ள நமது சமுதாயத்தின் திறமைமிக்க தொழில்முனைவோர், பார்வையாளர்கள், நவீன சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டை ஒரு உலகத் தரத்திலான தீர்வுகளை உருவாக்கும் தளமாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நாளைய தலைமுறை எதிர்கொள்ளும் மாற்றங்கள், சவால்கள் எதுவாக இருந்தாலும், நமது பாரம்பரியத்தையும், மொழி, கலாச்சாரத்தை முன்வைத்து,
தொழில் முனைவோர்களின் மூலமாக நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமும் இதுவாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க இலக்கியத்தின் உயிருள்ள செய்தியை மறுபடியும் உலகிற்கு நினைவூட்டும் விதமாக, இந்த மாநாடு அனைவருக்கும் திறந்தவெளி தளமாக அமையும் என்று அவர் கூறினார்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க இலக்கியத்தின் உயிருள்ள செய்தியை மறுபடியும் உலகிற்கு நினைவூட்டும் விதமாக, இந்த மாநாடு அனைவருக்கும் திறந்தவெளி தளமாக அமையும். இது போன்ற மாநாடுகள் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக அமையும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன்
குறிப்பிட்டுள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ் விழாவில் கலந்து கொள்வதற்காக
டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் எண்மர் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை அமெரிக்கா புறப்பட்டனர்.
இந்த 38ஆவது தமிழ் விழா ஜூலை 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த விழாவின் முதல் நாளில், உலகத் தமிழர்கள் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழர்களின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முன்னிறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் உலகத் தமிழர்களின் ஆளுமையான முக்கியப் பிரமுகராக, டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரையாற்றினார். உரை நிகழ்த்துவதற்கு முன்னதாக இந்திய சமுதாயத்திற்கு ஆற்றி வரும் சேவைக்காக அவருக்கு அங்கீகார விருது வழங்கப்பட்டது.
உலகளவில் தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்காமல் பறைசாற்றி வரும் டத்தோஸ்ரீ சரவணன் அமெரிக்காவுக்கு சென்று உரையாற்றுவது மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



