
இந்திய சமுதாயத்திற்கு பலனளிக்கும் திட்டங்களை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் நூருல் இசா அன்வார் கருத்து
இந்திய சமுதாயத்திற்கு பலனளிக்கும் திட்டங்களை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்
நூருல் இசா அன்வார் கருத்த
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 4-
இந்திய சமுதாயப் பிரச்சினைகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதைவிட இந்திய சமுதாயத்திற்கு பலனளிக்கும் திட்டங்களை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்று கெஅடிலான் கட்சி துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கூறினார்.
மௌனமாக இருப்பதால் எதையும் செய்யவில்லை என்று அர்த்தமாகாது. நான் தற்போது அமைதியை கடைபிடிக்கிறேன். நான் கடந்த காலங்களை போல குரல் கொடுக்க வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அமைதியாக இருக்கிறேன் என்பதால் எதையும் செய்யாமல் இருக்கிறேன் என்று அர்த்தமல்ல என்று நூருல் இசா தெரிவித்தார்.
நான் ஆழமான முடிவுகளில் தீவிர கவனம் செலுத்தி அமைதியாக வேலை செய்வதையே விரும்புகிறேன். நாடகத்திற்கு முன் நான் உள்ளடக்கத்தை அதிகம் நம்புகிறேன். ஆகையால் வெறுமென விமர்ச்சனங்களை அள்ளி வீச வேண்டாம் என்று 13ஆவது மலேசியா திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தை அதிகாரம் செய்வதற்கான முன்மொழியப்பட்ட முயற்சிகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது நூருல் இசா அவ்வாறு சொன்னார்.
மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிபுணர் வட்டமேசைக் கூட்டங்களில் சார்லஸ் சந்தியாகோ உட்பட பலருடன் விவாதித்துள்ள தனது அனுபவத்தை நூருல் இசா சார்ல்ஸ் சந்தியாகோ மூலம் பகிர்ந்து கொண்டார்.
இந்த முயற்சியில் பொருளாதார வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்று மாற்றத்தக்க தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த கூட்டங்கள் வெறும் சுய உதவிக்கான கூட்டம் அல்ல. மாறாக ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். அந்த செயல்திட்டம் இந்திய சமுதாயத்திற்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று நூருல் இசா அன்வார் குறிப்பிட்டுள்ளார்.



