
இணைய பகடிவதை! பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிருப்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு அமைச்சர் பாமி பட்சில் தகவல்
புத்ராஜெயா: ஜூலை 12-
சைபர் மிரட்டல் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பட்சில் கூறினார்.
இந்த இணையபகடிவதை்தொடர்பில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும்
MCMC எனும் மல்டிமீடியா கமிஷன் மற்றும் காவல்துறை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் அன்வார் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பாமி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் MCMC மற்றும் PDRM மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சரையில் பேசப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெள்ளிக்கிழமை தலைமை தாங்கிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு பாமி செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.
மரணத்திற்கு வழிவகுக்கும் இணைய மிரட்டல் சம்பவத்திற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்த நிலையில்
இணைய மிரட்டல் தொடர்வதைத் தடுக்க தாங்கள் முயற்சி மேற்கொள்ளவிருப்பதாக பாமி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு காண்டோமினியத்தில் உள்ள அவரது வீட்டில் ஈஷா என்ற ராஜேஸ்வரி (வயது 30) இணைய மிரட்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



