Malaysia

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு72,350.வெள்ளி நிதியுதவி துணையமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தகவல்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

ஷா ஆலம், ஜூலை 13- சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு72,350வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக
தொழில் துனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

எஸ்பிஎம் தேர்வில் 7ஏ, 8ஏ,9ஏ,10ஏ மற்றும் 11ஏ பெற்ற மாணவர்களுக்கு யாயாசான் பேங்க் ரக்யாட் மூலம் இந்த உதவி நிதி வழங்கப்பட்டுள்ளதாக
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இந்த உதவி நிதியை மொத்தம் 159 மாணவர்கள் பெற்றனர். சுங்கை பூலோ நாடாளுமன்றம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை கௌரவிப்பதில் தவறியதில்லை. மொத்தம் 72,350 வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ ரமணன் சொன்னார்.

எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்களின் செயல்திறன் ஊக்குவிக்கும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
இதன்வழி கல்வியாளர்களை ஊக்குவிக்க முடியும். எதிர்காலத்தில் அவர்களை மேலும் வெற்றிபெறச் செய்ய முடியும் என்று டத்தோ ரமணன் சொன்னார்.

 

இந்த உன்னதமான முயற்சி தொடரும் அதே நேரத்தில், நிலையான கல்வி முறையை நோக்கி நாட்டின் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் பங்கேற்பதற்காக மற்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்கும் என்று தான் நம்புவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர்களுக்கான விருதுகளை தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் எடுத்து வழங்கினார்.

இந்த விழாவில் டத்தோ ரமணணின் அரசியல் செயலாளர் டத்தோ பா.அன்புமணி, இந்த நிகழ்வில் யாயாசான் பேங்க் ரக்யாட் அறங்காவலர் குழு உறுப்பினர் Datuk Hj Zamri Salleh, Yb Ramanan பொது மேலாளர், சைஃபுல் ரிசல் அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button