
அரசாங்கம் டீசல் உதவித் தொகையை ரத்து செய்ததைத் தொடர்ந்து பணவீக்கம் ஆண்டுக்கு 2 முதல் 3.5 விழுக்காடு வரை இருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தகவல்
கோலாலம்பூர்,ஜூலை 16-
அரசாங்கம் டீசல் உதவித் தொகையை ரத்து செய்ததைத் தொடர்ந்து பணவீக்கம் ஆண்டுக்கு இரண்டு முதல் 3.5 சதவீதம் வரை இருக்கும் என்று அரசாங்கம் கணித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
எரிபொருள் மானியங்களை சரியான அணுகுமுறையில் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்வழி கணிசமான பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மக்களைவையில் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் பணவீக்கம் குறைந்த தற்கான புள்ளிவிவரங்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
ஆகையால், மக்களுக்கான மற்ற உதவித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது பொருத்தமான காலம் என்று அரசாங்கம் கருதுகிறது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பணவீக்கம் 3.4 விழுக்காடாக இருந்தது. இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் 1.8 விழுக்காடு குறந்துள்ளதை காட்டுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேலும் சொன்னார்.



