InternationalMalaysia

இலக்கியம் , தமிழ் மொழி, தமிழ் சார்ந்த முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு லண்டன் கம்பன் விழாவில் “செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கி கௌரவிப்பு

கோலாலம்பூர்,ஜூலை
லண்டன் அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் லண்டனில் நடைப்பெற்ற கம்பன் விழாவில் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு “செந்தமிழ்ச் செல்வர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த கம்பன் விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் முதல் நாள் பேருரை ஆற்றினார்.
மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய மேம்பாடு, தமிழ்ப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து தமதுரையில் விளக்கிக் கூறினார்.

இந்நிலையில் இரண்டாவது நாள் நடைபெற்ற விழாவில், கம்பம் விழா குழுவினர் டத்தோஸ்ரீ எம். சரவணனுக்குச் ‘செந்தமிழ்ச் செல்வர்’ என்ற விருது வழங்கி கௌரவித்தனர்.

மலேசியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் மத்தியில் இலக்கியம் , தமிழ் மொழி, தமிழ் சார்ந்த முன்னேற்றத்திற்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழுக்காக எடுத்து வரும் முயற்சியைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

டத்தோஸ்ரீ சரவணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். அந்த வகையில் சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களுக்கு லண்டன் மாநகரில் ‘செந்தமிழ்ச் செல்வர் ‘விருது வழங்கி கெளரவிக்கப்பட்டதற்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அச்சங்கம் அறிக்கை ஒன்றில் கூறியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button