Malaysia

இணைய பகடிவதைக்கான சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கைகள் சம்பத்தப்பட்ட அமைச்சுகளுடன் விவாதிக்கப்படும்: ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

கோலாலம்பூர்,ஜூலை 18-
நாட்டில் இணைய பகடிவதை பரவலாகி வருவதால் இணைய பகடிவதைக்கான சட்டத்தை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக .தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

இந்த இணையப் பகடிவதை தொடர்பான சட்டம் இயற்றுவது குறித்து பல அமைச்சுகளுடன் விவாதிக்கப்பட வேண்டும். நாங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் விவாதிப்போம். இணைய பகடிவதை வரையறையின் அடிப்படையில் மட்டுமல்லாமல்,
அபராதம் அல்லது விதிக்கப்படும் தண்டனைகளின் அடிப்படையில் கடுமையாக்கப்பட வேண்டிய சட்டங்கள் தற்போது உள்ளன என்று ஃபஹ்மி ஃபட்சில் தெளிவுடுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு சிறிது காலம் வேண்டும். எனினும் கொள்கையளவில் இது அமைச்சரவையில் பேசப்பட்டது உண்மை மூன்று முதல் நான்கு அமைச்சர்கள் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேம்படுத்தப்பட வேண்டிய சட்ட அம்சங்களை நாங்கள் ஒன்றாக அமர்ந்து ஆய்வு செய்வோம் என்று ஃபஹ்மி ஃபட்சில் மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button