Malaysia

கருத்துப் பதிவிடல் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதற்கு ஊடகங்களே பொறுப்பேற்க வேண்டும் அமைச்சர் ஃபஹ்மி பாட்சில் கருத்து

கோலாலம்பூர்,ஜூலை 18-
கருத்துப் பதிவிடல் தொடர்பில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

சமூக ஊடக கணக்குகளில் பொது மக்கள் வெளியிடும் கருத்துகளை முடக்கும்படி ஊடகத் துறையினருக்கு நான் உத்தரவிடவில்லை. மாறாக தங்கள் தளங்களில் கருத்துகளைத் தடுப்பது உள்பட கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமை ஊடக நிறுவனங்களுக்கு இருக்கிறது என்று ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சில ஊடகங்களின் இணைய ஊடக கணக்குகளில் கருத்துப் பகுதி முடக்கம் செய்யப்பட்டது மற்றும் பேச்சு சுதந்திரத்தையும் இணையப் பகடிவதையை தடுப்பதற்கான சட்ட நடவடிக்கையையும் சமநிலைப்படுத்துவதற்கான தேவை குறித்து பாசீர் மாஸ் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் அகமது ஃபாட்லி ஷாரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

வாசகர்கள் வெளியிடும் கருத்துகளுக்கு சம்பந்தப்பட்ட ஊடகத் தளங்களே பொறுப்பு என கடந்த 2021இல் இது தொடர்பான ஒரு வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருந்தது என்று
ஃபஹ்மி ஃபாட்சில் சுட்டிக் காட்டினார்.
.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button