
கம்போங் பூங்கா ராயா குடும்பங்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு 36 குடும்பங்களுக்கு சிலாங்கூர் கூ வீடுகள் பாப்பாராயுடு தகவல்
ஷாஆலாம், மார்ச் 10-
சுங்கை பூலோ கம்போங் பூங்கா ராயா குடியிருப்புவாசிகளின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கூறினார்.
இந்த பகுதியில் வீட்டுப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் மொத்தம் 36 குடும்பங்கள் சிலாங்கூர் கூ வீடுகளுக்கான கடிதங்களை பெறுவார்கள் என்று பாப்பா ராயுடு தெரிவித்தார்.

அலாம் பெர்டானா, புன்சாக் அலாம் ஆகிய இடங்களில் 42,000 ரிங்கிட் மதிப்புள்ள குடியிருப்பு வழங்கப்படும். இது கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் அப்பகுதியில் வசிப்பவர்களின் தீர்வுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாநில அரசின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று பாப்பா ராயுடு சொன்னார்.
நாங்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினோம். சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் மூலம் மொத்தம் 36 குடும்பங்கள் சிலாங்கூர் கூ வீடுகளுக்கு விண்ணப்பித்துள்ளன.
திவால் ஆகாமல் இருப்பது, கடன் ஒப்புதல் பெறுவது போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
பெற்றோர்கள் இறந்துவிட்டால் அவர்களின் பிள்ளைகள் இந்த வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, விண்ணப்பம் செய்யாத குடும்பங்கள் அல்லது வாரிசுகள் உடனடியாக பதிவு செய்யும்படி பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



