
மஇகாவில் இது தேர்தல் ஆண்டு தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27ல் நடைபெறும் தலைமை செயலாளர் டத்தோ ஆர்.டி.ராஜா்தகவல்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர், மார்ச் 10- ம.இ.காவில் இவ்வாண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் அனைத்து பிரிவுகளிலும் தேர்தல் கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக
கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ ஆர்.டி. ராஜா கூறினார்.
இதில் முதல் கட்டமாக கிளைகளுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகள் நடைபெறவுள்ளது.
இதில் 143 தொகுதிகளில் உள்ள 4 ஆயிரம் கிளைகள் இந்த வேட்புமனுவில் உட்படுத்தப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து கிளைகளுக்கான ஆண்டுக் கூட்டம் வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் குறிப்பாக கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுதாக்கல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒருவேளை தலைவர் பதவிக்கு போட்டி என்றால் அதற்கான தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து இதர பிரிவுகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று டத்தோ ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.



