
மலேசிய இந்திய டெக்சி, வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் தந்தையர் தின விழா 2024 சிறப்பாக நடந்தேரியது பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி
பினாங்கு,ஜூலை 22-
மலேசிய இந்திய டெக்சி, வாடகைக் கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் தந்தையர் தின விழா 2024
3ஆவது ஆண்டாக சங்கத்தின் ஏற்பாட்டில்
சிறப்பாக நடந்தேறியது
இந த விழா, பினாங்கு மாநில பொறுப்பாளர்களின் அயராத ஆதரவினால் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் தனது உறுப்பினர்களின் வற்றாத ஆதரவினால் இச்சங்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பல தொடர் சேவைகளை தனது உறுப்பினர்களின் பலத்தினால் செயல் பட்டு வருவதாக அச்சங்கத்தின் ஆலோசகர் சுப்ரமணியம் ஆறுமுகம் கூறினார்.
டெக்சி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்த சில திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் ஒன்றாக கூட்டுறவு கழகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
சுமார் ஏழு நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் அவர் தம் குடும்பத்தினர்களும் கலந்துக் கொண்ட இவ்விழா மூன்றாவது ஆண்டாக இங்கு பினாங்கு, சிம்பாங் அம்பட், புக்கிட் தம்பூன் சீனப்பள்ளி மண்டத்தில் நடந்தேறியது.
முதல் தந்தையர் தின விழா சிலாங்கூரிலும் இரண்டாவது விழா சிறம்பானிலும் நடத்தப்பட்டு மூன்றாவதாக பினாங்கில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.

பினாங்கு மாநிலத்தை பிரநிதித்து அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் திரு.பன்னீர் செல்வம் மற்றும் திரு.முரளி ஆகியோரது ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளஐ இவ்விழாவில் தேசிய துணைத்தலைவர் திரு.கிருஷ்ண மூர்த்தி, தேசிய செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் மாநில தலைவர்கள், செயலவையினர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மாநில துணை முதலமைச்சரின் இந்திய விவகார பிரிவின் அதிகாரி டத்தோ மு.ராமசந்திரன் சிறப்பு பிரமுகராக கலந்துக் கொண்டு சிறப்பித்ததோடு,
சங்க பொறுப்பாளர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
விருந்துபசரிப்புடன் அதிஷ்ட குலுக்களும் ஆடல், பாடல்களும் சிறப்பு அங்கங்களாக இடம்பெற்ற இந்த தந்தையர் தின நிகழ்வில் பல உறுப்பினர்களுக்கு சிறப்புகள் நல்கப்பட்டது.
சங்க உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி வெற்றிப் பெற்றுள்ளது எனவும் அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் எனவும் தேசிய அளவிலான தலைவர்கள் தெரிவித்தனர்.



