Malaysia
Trending

நாடு தழுவிய நிலையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மீண்டும் கல்வி புரட்சியை அதிரடியாக மேற்கொள்ளும் தான்ஸ்ரீ தம்பிராஜா அறிவிப்பு

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பெட்டாலிங் ஜெயா, ஜன.29-

கல்வியும் சமயமும் என்ற தாரக மந்திரத்தில் கடந்த 42 ஆண்டுகளாக இந்திய சமுதாய மாணவர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மாபெரும் கல்விப்புரட்சியை நாடு தழுவிய நிலையில் மேற்கொள்ளவிருப்பதாக ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் தான்ஸ்ரீ தம்பிராஜா கூறினார்.

இந்திய சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் ஸ்ரீ முருகன் நிலையம் நாடு தழுவிய நிலையில் முன்னேற்றம் நம் உரிமை என்ற அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் கல்வி புரட்சியை மேற்கொள்ளும் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநருமான தான்ஸ்ரீ தம்பிராஜா நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய போது இதனை தெரிவித்தார்.

இதன் முன்னோட்டமாக ஸ்ரீ முருகன் நிலையத்தில் ‘முன்னேற்றம் நம் உரிமை’ நிகழ்வு தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேசிய எஸ்.டி.பி.எம். கருத்தரங்கு அடுத்த மாதம் பிப்ரவரி 17 & 18 அன்று நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் SMC நிலையங்கள் செயல்படவுள்ளன. முக்கியமாக கோலாலம்பூரிலுள்ள பிரிக்பில்டஸ் நிலையத்தின் பதிவு நாளாக எதிர்வரும் மார்ச் 31 நிர்ணயம் செய்யப்பட்டது.

ஸ்ரீ முருகன் நிலையத்தின் முன்னேற்றம் நம் உரிமை எனும் நிகழ்வில்
2024 ஆண்டுக்கான பணி, குறிக்கோள் விளக்கக்கூட்ட அமைப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தலைமையுரையாற்றினார். இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி பினாங்கு முதல் ஜொகூர் வரை மீண்டும் புத்தெழுச்சியுடன் வார வகுப்புகள் (ஆறாம் ஆண்டு, மூன்றாம் படிவம் மற்றும் எஸ்பிஎம்) தொடங்கப்படும் என்று பலத்த கரகோஷத்தோடு சொன்னார்.

யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது அபாரமாகக் குறைந்துள்ளன எனும் பல பெற்றோர்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருவதை கருத்தில் கொண்டும், கல்வி ஒன்றே இந்நாட்டில் இந்திய சமுதாயத்தை ஒருமனதாக ஒன்றிணைக்கும் வெற்றிக்கருவி என்பதை உணர்ந்தும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தான்ஸ்ரீ தம்பிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button