Malaysia

இந்நாட்டில் இந்திய சமுதாயம் கல்வியின் வழி மட்டுமே முன்னேற முடியும் வீ.கணபதிராவ் திட்டவட்டவட்டம்

தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பெட்டாலிங் ஜெயா, ஜன.28-

இந்நாட்டில் இந்திய சமுதாயம் கல்வியின் வழி மட்டுமே முன்னேற முடியும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறியுள்ளார்.

இந்திய சமுதாயம் இன்னமும் சரியாக முன்னேற முடியாமல் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், கல்வி நம்மை உயர்த்தும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களை வழிநடத்திச் செல்ல ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தயாராக உள்ளது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் நடைபெற்ற முன்னேற்றம் நம் உரிமை நிகழ்வில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் கணபதிராவ் அவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கடந்த 42 ஆண்டுகளை கடந்து பயணித்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் எத்தனை மாணவர்கள் பட்டதாரிகள் ஆகி இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர். இதற்கு இங்கு விருது அங்கீகாரம் பெற்றவர்கள் ஓர் உதாரணம் என்று கணபதிராவ் சொன்னார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் சமுதாய மாணவர்களுக்கு பெரும் பயனாக இருந்து வருகிறது. மாணவர்களை செதுக்கி நல்ல திறன்மிக்க மாணவர்களாக உருவாக்கி வருகின்றனர். இதற்கு நாம் தலைவணங்க வேண்டும் என்று கணபதிராவ் கூறினார்.

இந்த ஸ்ரீ முருகன் கங்வி நிலையத்தின் “முன்னேற்றம் நம் உரிமை” நாடு தழுவிய நிலையில் இருக்கும் மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாக இருக்க வகை செய்யும் என்று நம்புவதாக கணபதிராவ் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ முருகன் நிலையத்தில்்நடைபெற்ற ‘முன்னேற்றம் நம் உரிமை’ நிகழ்வு மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாகும். அதன் தொடர்ச்சியாக தேசிய எஸ்.டி.பி.எம் கருத்தரங்கு பிப்ரவரி 17 & 18 அன்று நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் SMC நிலையங்கள் செயல்படவுள்ளன. முக்கியமாக கோலாலம்பூரிலுள்ள பிரிக்பில்டஸ் நிலையத்தின் பதிவு மார்ச் 31இல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button