
மித்ரா நிதி 10 கோடி வெள்ளியால் இந்திய சமுதாயம் பயன்பெறவில்லை வீ.கணபதிராவ் குற்றச்சாட்டு
தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
பெட்டாலிங்ஜெயா,ஜன.28-
மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி வெள்ளியால் இந்திய சமுதாயம் பயன் பெறவில்லை என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மித்ரா நடவடிக்கை குழுவில் நான் இடம் பெற்றேன். ஆனால், அதன் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடில்லை
இதில் ஒதுக்கப்பட்ட நிதியால் இந்திய சமுதாயம் முழுமையாக பயன் பெற்வில்லை என்று கணபதிராவ் சாடினார்.
இந்தியர் உருமாற்றப் பிரிவுதான் மித்ரா. உருமாற்றம் என்றால் என்ன? சமுதாய மேம்பாடு. மித்ரா நிதியின் கீழ் சமுதாய மேம்பாடு நடந்துள்ளதா? சமுதாயத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளதா? அந்த 10 கோடி வெள்ளி நிதி சரியான தரப்பினருக்கு சென்று சேர்ந்துள்ளதா? நிதியை முடிப்பது முக்கியமல்ல. அதனை யாரும் முடித்து விடலாம். நிதியை சரியாக கையாண்டீர்களா? எதுவும் முறையாக நடக்கவில்லை என்று கணபதிராவ் சொன்னார்.
இதுகுறித்து கேள்வி கேட்டதால் மித்ரா நடவடிக்கை குழுவில் இருந்து நீக்கப்பட்டேன்.
அரசியலில் கட்சி கொடிகள் மட்டும்தான் வேறு. சிந்தனை எல்லாம் ஒன்றுதான். ஆகவே இந்திய சமுதாயம் கல்வியில் வழியே இந்த நாட்டில் சாதிக்க வேண்டும் என்று கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



