Malaysia

நமது உரிமைகளை கேட்டுத்தான் பெற வேண்டும் வீ.கணபதிராவ் காட்டம்

தேசம் செய்திகள் குணாளன் மணியம், ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பெட்டாலிங்ஜெயா, ஜன.28-
நமது உரிமைகளை பெறுவதற்கு நடப்பு அரசாங்கத்திடம் கேள்வி கேட்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறியுள்ளார்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் நமது உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். இல்லாவிடடால் எதுவும் நடக்காது என்று ஸ்ரீ முருகன் நிலைய நிகழ்வில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம் கணபதிராவ் அவ்வாறு தெரிவித்தார்.

இந்தியர் விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். இந்த கேள்விகளுக்கு எந்தவித பதிலும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக என்று கணபதிராவ் சொன்னார்.

இந்திய சமுதாயத்தின் உரிமைக்காக தொடர்ந்து பல கேள்வி எழுப்புவதால்தான் எனக்கு பல பிரச்சினைகள். ஆனால் அது குறித்து நான் கவலைப்பட போவதில்லை. இந்திய சமுதாயத்தின் நலனுக்காக தொடரந்து கேள்வி எழுப்புவேன் என்று கணபதிராவ் சூளுரைத்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, ஆலயங்களுக்கான நிதி, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து நான் கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால் இந்த கேள்விகள் எதற்கும் முறையான பதில் கிடைப்பது இல்லை. இருந்தாலும் சமுதாயத்திற்காக கேள்வி எழுப்புவது எனது உரிமை என்றார் கணபதிராவ்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button