Malaysia

கூட்டரசு பிரதேச ம.இ.காவின் 78ஆவது பேராளர் மாநாடு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர்/படங்கள் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர்,ஆக.17-
நாடு தழுவிய நிலையில் ம.இ.காவின் மாநில மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கூட்டரசு பிரதேச ம.இ.காவின் மாநாடு ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

இந்த கூட்டரசு பிரதேச ம.இ.கா மாநாட்டை அதன் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டரசு பிரதேச ம.இ.காவினர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை கூட்டரசு பிரதேச ம.இ.கா தலைவர் டத்தோ ராஜா சைமன் தலைமையுரையாற்றினார்.

கூட்டரசு பிரதேச ம.இ.கா செய்த சேவைகள், நடஙடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் கட்சி வலுவுடன் செயல்பட்டு வருவது குறித்து பாராட்டி பேசினார்.

இந்த மாநாட்டில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு டத்தோ ராஜா சைமன் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

இந்த கூட்டரசு பிரதேச ம.இ.கா மாநாட்டில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுடன் தேசிய உதவித்தலைவர் டத்தோ அசோஜன், டத்தோ தொ.முருகையா, டத்தோ நெல்சன், ம.இ.கா பொருளாளர் தான்ஸ்ரீ ராமசாமி, ம.இ.கா தலைவர்கள் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button