
புக்கிட் மெர்தாஜாம் பிரம்ம குமாரிகள் அறவாரியத்தின் ஏற்பாட்டில், ரக்ஷா பந்தன் பாதுகாப்பு விழா கடந்த ஞாயிறன்று புக்கிட் மெர்தாஜாம் மை தங்கும் விடுதியில் சிறப்பாக நடந்தேறியது
பினாங்கு மாநில தேசம் செய்தியாளர் மு.வ.கலைமணி
பினாங்கு,ஆக.18-
புக்கிட் மெர்தாஜாம் பிரம்ம குமாரிகள் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ரக்ஷா பந்தன் பாதுகாப்பு விழா கடந்த ஞாயிறன்று புக்கிட் மெர்தாஜாம்
மை தங்கும் விடுதியில் சிறப்பாக நடந்தேறியது.
இவ்விழாவிற்கு பேச்சாளர் சகோதரி பி.கே.சுமன், இந்தியாவின் ராஜஸ்தான், மவுண்ட் அபு, கியான் சரோவர் வளாகத்தில் உள்ள உலகளாவிய தலைமையகத்தில் உள்ள மூத்த தியான ஆசிரியர் மற்றும் மேலாண்மை பயிற்சியாளர்
சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.
“ராக்கி அல்லது ரக்ஷா பந்தன் என்பது நம் உலகில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் அழகான பிணைப்பைக் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இங்கே இது படைப்பாளரான கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குவோம்.
இது ஸ்ப்ரீம் சோர்ஸுக்கும் அவரது படைப்புக்கும் இடையே உள்ள அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை எடுத்துக்காட்டும் ஓர் உன்னத விழாவாகும்.
டத்தோ டாக்டர் துரைசாமி வரவேற்புரையோடு, மன அமைதிக்கான பிரம்மா குமாரிஸ் தலைமையகத்திற்கு தனது பயணத்தைப் பற்றிய அனுபவத்தைப்
சகோதரி பி.கே.சுமன்
பகிர்ந்து கொண்டார்.
அன்பு மற்றும் பாதுகாப்பின் கடவுளின் வரம்” என்ற தலைப்பில் அழகான உரையை நிகழ்த்தினார்.
தியான அதிர்வில் லட்டு மற்றும் ஆசீர்வாதத்துடன் ராக்கி கட்டியதோடு, விருந்தினர்களுக்கு இறுதியில் சாத்வீக சைவ நாசி பிரியாணி வழங்கப்பட்டது.


ரக்ஷா பந்தனைக் கொண்டாட சுமார் 60 விருந்தினர்கள் வந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக,
டத்தோ டாக்டர் துரைசாமி கோவிந்தசாமி கௌரவ பொதுச் செயலாளர் – ( WHD) Msian.
டத்தோ டாக்டர் புளோரன்ஸ், மனோரஞ்சிதம் ஸ்நேஹாம் மலேசியாவின் தலைவர்,
டாக்டர் சித்ரா குப்புசாமி, டாக்டர்
எம்டிஎம் ஷாமலா விஸ் சுப்ரமணியம்,
ஷான் குழந்தைகள் இல்ல செயலர் பிறை,
திரு சேகர் ராமையா பெர்சத்துவான் மகிழ்ச்சி,
திரு எம்ஜிஆர் குமார் பெர்சத்துவான் எம்ஜிஆர்,
திரு.பாலச்சந்தர் தன்னார்வ தொண்டு நிறுவனம்
சிம்பாங் அம்பாட் முனீஸ்வரர் கோவில்.
திரு சௌந்தரராஜன் மேரி மலேசிய இந்து சங்கம் அல்மா,
திரு S.O அப்பன் ஜாவி ஸ்ரீ தண்டயாதபாபானி ஆலய தலைவர்,
திரு பாலன் பெர்சத்துவான் சிவிக்,
டாக்டர் சங்கீதா
பிரம்மா குமாரிஸ் அறக்கட்டளை ஆகியோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



