
சுங்கை ரெங்கம் மாநாட்டு மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ம.இ.காவின் தீபாவளி விருந்துபசரிப்பு மக்கள் பங்கேற்க டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் அழைப்பு
ஷா ஆலம், நவ.26-
தீபாவளி முடிந்த போதிலும் அது தொடர்பான கொண்டாட்டங்கள் மற்றும் விருந்துபசரிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் சிலாங்கூர் ம.இ.காவின் ஏற்பாட்டில் தீபாவளி விருந்துபசரிப்பு நவம்பர் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுங்கை ரெங்கம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தீபாவளி விருந்துபசரிப்பில்
மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த தீபாவளி விருந்துபசரிப்பில் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரபல கலைஞர் காந்திபன் மற்றும் எம்.ஜி.விஐய் உட்பட பாடகர்கள் நடன கலைஞர்கள் பலரும் பங்கேற்கவிருக்கின்றனர். ஆகையால், சிலாங்கூர் மாநில ம.இ.காவினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி டத்தோ சங்கர் ராஜ் ஐயங்கார் கேட்டுக் கொண்டுள்ளார்.



