
Malaysia
அனுமதிக்கப்படாத இடத்தில் வாகனம் நிறுத்தம் ஈப்போ போலிஸ் எச்சரிக்கை
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, நவ.26-
ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனை
எதிரே
அமைந்திருக்கும்
ராஜா அஸ்மான் ஷா பிரதான சாலையில் அனுமதிக்கப்படாத
இடத்தில் வாகனம்
நிறுத்தப்பட்டால்
ஈப்போ மாவட்ட போலிஸ் சம்மன்
வெளியாக்கும் என
ஈப்போ மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அபாங் சைனால் அபிடின் அபாங் அமாட் எச்சரிக்கையூட்டினார்.
மருத்துவமனை எதிர்புற பேருந்து சாவடி ( சமிஞ்சை விளக்கு நோக்கி), இரட்டை நிறுத்துமிட ( டபல் பார்க்கிங்),
மற்றும் அருகாமை
சாலை வட்டம் சுற்று வட்டாரம்
போன்ற இடத்தில்
வாகனத்தை நிறுத்தாமல் பார்த்து கொள்ள
அவர் நினைவுப்படுத்தினார்.
மேற் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சாலை
போக்குவரத்து நெரிச்சல் சுட்டிக்காட்டி பொது
மக்களிடமிருந்து
புகார்கள் கிடைத்த
வண்ணம் இருப்பதாக சுட்டிக்
காட்டினார்.



