Malaysia

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு புதிய நிதி விதிமுறைகள் முட்டாள்தனமானது, அபத்தமானது ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் சாடினார்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,நவ.26-
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு மென்மொழியப்பட்டுள்ள புதிய நிதி விதிமுறைகள் அரசாங்கத்திற்கான ஆதரவை குறிப்பாக இந்திய சமூகத்தின் ஆதரவை சிதைக்கக்கூடும் என்று மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் கூறினார்.

சமூகத்தினரு இடையே ஒற்றுமை, புரிதல் மற்றும் சமூக நலனை வளர்ப்பதில் இந்துக் கோயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகையால், முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதியுதவி தொடர்பான புதிய விதிமுறைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடுமையாக சாடியுள்ளார்.

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய நிதி விதிகளை “முட்டாள்தனமான, நியாயமற்ற மற்றும் அபத்தமானது”.
“முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை அவமரியாதை செய்யாதீர்கள்.
“குறிப்பாக, இந்து கோவில்கள், சமூகத்தினரிடையே ஒற்றுமை, புரிதல் மற்றும் சமூக நலனை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.”

நாட்டில் பல இந்து கோவில்கள் எதிர்கொள்ளும் நிதிப் போராட்டங்களை அவர் எடுத்துரைத்தார், புதிய விதிகள் இந்த கோவில்களின் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் அவசரநிலைகளுக்கான அத்தியாவசிய நிதியை இழக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெளிவுபடுத்தினார்.

கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை திணிப்பதற்குப் பதிலாக, நிதி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டும். நிதியை வழங்குவதற்கு முன் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து கண்காணிக்க புத்ராஜெயா குழுக்களை நியமிக்குமாறு சரவணன் பரிந்துரைத்தார்.

“இந்த அணுகுமுறை வழிகாட்டுதல்களை திருத்துவதை விட மிகவும் பகுத்தறிவு மற்றும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த திங்கட்கிழமை, துணை துணையமைச்சர் அய்மன் அதிரா சாபு மக்களவையில் சில திருத்தங்களை வெளிப்படுத்தினார், இதில் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் இருந்து ஏற்கனவே அரசாங்க நிதியைப் பெற்றுள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்கள் மூன்று ஆண்டுகள் நிதியை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய போதிலும், இந்திய சமூகத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்வதாகவும் டத்தோஸ்ரீ சரவணன் குற்றஞ்சாட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button