
Malaysia
மூன்றாம் தரப் பிரஜைகள் என்று யாருமில்லை- அரசியலமைப்புச் சட்டப் படி நாம் அனைவரும் சமமே!
ஷா ஆலம், ஜூலை 30 இந்நாட்டில் மூன்றாம் தரப் பிரஜைகள், இரண்டாம் தரப் பிரஜைகள் என்று யாரும் இல்லை என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டப்படி அனைவரும் சமமே. அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதி செய்வதும் அந்த உரிமையை மீட்டுத் தருவதும் மாநில அரசின் நடப்பு தலைமைத்துவத்தின் கடமையாகும் என்றும் அமிருடின் சாரி தெரிவித்தார்
உரிமைகளை உறுதி செய்வதில் சரும நிறம், அரசியல் சித்தாந்தம், சமய வேறுபாடு மற்றும் இதர வேறுபாடுகள் கவனத்தில் கொள்ளப் படாது.இதுதான் மாநில அரசின் நிலைப்பாடாகும் என அமிருடின் சொன்னார்.
மைசெல் பிரிவின் ஏற்பாட்டில் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அடையாள ஆவணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது அமிருடின் சொன்னார்.



