
Malaysia
ஆவணமற்ற 65 தாய்லாந்து நாட்டு குடியேறிகள்.கைது. 3 உள்ளூர் தாய்லாந்து உணவக உரிமையாளர்கள் மீது குற்றச்சாட்டு?
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஜுலை-30
ஈப்போ மாநகர் பிரபல்ய தாய்லாந்து உணவகத்தில் பேராக் குடி நுழைவு இலாகா நடத்திய சோதனையில் ஆவணமற்ற 65 தாய்லாந்து நாட்டு
குடியேறிகள்.கைது
செய்யப்பட்டதாக
அதன் இயக்குனர்
மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல்.மாலிக் கூறினார்.
திங்கட்கிழமை இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11.30 மணிக்கு நிறைவடந்த சோதனையின்
போது 2 வயதிலிருந்து 51 வயது உட்பட்ட 38 தாய்லாந்து ஆடவர்கள் 21 தாய்லாந்து பெண்கள் தடுத்து
வைக்கப்பட்டதாக
தெரிவித்தார்.
வேலைக்கு அமர்த்தியதாக
நம்பப்படும் 25- 43 வயது இடைப்பட்ட உள்ளூர் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் விசாரணைக்காக
தடுத்து வைத்து நீதி மன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக சொன்னார்.



