Malaysia

பினாங்கு திருமுறை விழா பினாங்கு ம.இ.கா நிதியுதி வழங்கியது நமது இந்து மாணவர்களை நெறிப்படுத்தும் பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் நம்பிக்கை

பட்டவொர்த்,செப்.2-
மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில வட்டா்ப்பேரவை நடத்தி வரும் திருமுறை ஓதும் போட்டி நமது இந்து மாணவர்களை நெறிப்படுத்தும் என்று பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ.தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் பினாங்கு மாநில வட்டாரப்பேரவை நடத்திய திருமுறை ஓதும் போட்டி நமது மாணவர்கள் திருமுறை ஓதுவது குறித்து நன்கு அறிந்து கொள்ள முடியும். அதேநேரத்தில் நமது மாணவர்கள் ஒழுக்கமுள்ள மாணவர்.களாக செதுக்க முடியும் என்று டத்தோ தினகரன் கூறினார்.

பினாங்கு வட்டாரப்பேரவையின் முயற்சியை பாராட்டுகிறேன். பினாங்கு மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் 12 இந்து சங்க வட்டார பேரவை நடத்திய திருமுறை ஓதும் விழாவில் 3,500 மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று திருமுறை ஓதியிருப்பது பாராட்டத்தக்கது என்று டத்தோ தினகரன் சொன்னார்.

இது போன்ற திருமுறை ஓதும் விழாக்கள் போட்டிகளாக இன்னும் அதிகளவில் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இதன்வழி மாணவர்கள் இந்து சமயத்தை நன்கு தெரிந்து கொள்ள முடியும் என்றார் டத்தோ தினகரன்.

மலேசிய இந்து சங்கத்தின் பினாங்கு மாநில வட்டாரப் பேரவை நடத்திய திருமுறை ஓதும் நிகழ்வில் பினாங்கு மாநில ம.இ.கா 9 ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்கியது.
பினாங்கு மாநில ம.இ.கா வழங்கிய இந்நிதியுதவி அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புவதாக டத்தோ ஜெ.தினகரன் கூறினார்.

அதேநேரத்தில் இந்து அறப்பணி வாரியம் 6 ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்கியது.
இந்த திருமுறை ஓதும் விழாவை பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் முடித்து வைத்தார். இந்த நிகழ்வில் மலேசிய இந்து சங்க தலைவர் திரு தங்ககணேசன்,
பினாங்கு மாநில இந்து சங்க தலைவர் தருமன் ஆனந்தன், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.என்.எஸ். ராயர், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், மலேசிய இந்து சங்க முன்னாள் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான், டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலம், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், பட்டவொர்த் பேரவை தலைவர் விவேக நாயகம் கோ.சண்முகநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள் என்று சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button