
Malaysia
நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத் தடையில்லை அனைத்து மதங்களை அனைவரும் மதிக்க வேண்டும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
ஷா ஆலம், செப்.15-
நாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதற்கு எந்த தடையும் இல்லை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
நீதிமன்றத்தின் முடிவுதான் அரசாங்கத்தின் முடிவு என்பதால் அது குறித்து யாரும் கவலை கொள்ளத்தேவையில்லை. நாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் இருக்கத் தடையில்லை என்று ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் உரையாற்றிய போது டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி அவ்வாறு தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழை பொறுத்தவரையில் அதனை முஸ்லீம் அல்லாதவர்களை எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம் என்று டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் தெரிவித்தார்



