
ம.இ.காவின் 78ஆவது மாநாடு தனித்துவம் மிக்க தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ம.இ.கா தலைமைச்செயலாளர் டத்தோ Dr ஆனந்தன் புகழாரம்
தேசம் ம.இ.கா மாநாட்டு செய்திகள் குணாளன் மணியம்,ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,செப்.15-
ம.இ.கா என்ற மாபெரும் தாய்கட்சியை அதன் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலுவான கட்சியாக வழிநடத்திக் கொண்டிருப்பதாக ம.இ.காவின் தலைமைச்செயலாளர் டத்தோ Dr ஆனந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ம.இ.காவின் தலைமைச்செயலாளராக என்னை நியமித்த தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கண்டிப்பாக எனது பணியை சிறந்த முறையில் நிறைவேற்றுவேன் என்று கெடா டத்தோ ஆனந்தன் உறுதி கூறினார்.
தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.காவை சிறந்த முறையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ம.அ.கா என்ற மாபெரும் கட்சியை மக்கள் மீண்டும் திரும்பி பார்க்கும் ஒரு வலுவான கட்சியாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.
ம.இ.கா இன்று நிதி வளத்தில் மிகவும் வலுவாக இருப்பதற்கு முக்கிய காரணம் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்கள்தான் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. ம.இ.காவை சிறந்த முறையில் வழி நடத்தி வரும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்து முழு ஆதரவு வழங்குவதோடு எனது தலைமைச்செயலாளர் பணியை சிறந்த முறையில் மேற்கொள்ளவிருப்பதாக ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய டத்தோ Dr ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.



