
நாட்டில் மதவிவகாரங்களில் விளையாடுவதை நிறுத்துங்கள் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்து
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
ஷா ஆலம், செப்.15-
நாட்டில் மதவிவகாரங்களில் விளையாடும் அரசியலை நிறுத்துங்கள் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த 3R மதவிவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். அதாவது மதவிவகாரங்களை எழுப்பு நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். இதனை ம.இ.கா முழுமையாக ஆதரிப்பதாக ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் உரையாற்றிய தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
நாட்டில் 3R விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும். நாட்டின் ஐஜிபி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.



