
தமிழ்ப்பள்ளிகள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக்கூடாது தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன் மணியம்
ஷா ஆலம், செப்.15-
தமிழ்ப்பள்ளிகள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சூளுரைத்துள்ளார்.
நாட்டில் அண்மைய காலமாக தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றன. நாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் தேவையில்லை என்று வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததோடு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தாய்மொழிப்பள்ளிகள் செயல்படுவதாக தீர்ப்பளித்திருந்தது. இதனை ம.இ.கா முழுமையாக ஆதரிப்பதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
இந்த தாய்மொழி பள்ளிகள் விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி அது குறித்து யாரும் எழுப்பாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.



