
Malaysia
வான வெடி தீப்பொறி கூரை மீது பாய்ச்சப்பட்ட விளைவினால் தீ சம்பவத்திற்கு இட்டு சென்றது தனி நபர் கைது
தேசம் செய்திகள் ந. ஆ.யுவராஜ்
தெலுக் இந்தான், நவ.6
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில்
இங்குள்ள ஜாலான் ராஜா சாலையில் அமைந்திருக்கும்
அரினா ஸ்குவர் சதுக்க மண்டபத்தின்
ஒரு பகுதி தீ சம்பவத்தில் அழிந்ததற்க்கு வான் வெடி தீப்பொறி அதன் கூரை மீது பாய்ச்சப்பட கூரையில் தீ எழும்ப காரணமாய்
இருந்ததாக ஹிலிர் பேராக் மாவட்ட போலிஸ் உதவி ஆணையர் அமாட் அட்னான் பஸ்ரி உறுதிப்படுத்தினார்.
ஒரு தனி நபர் ஏற்பாடு செய்த பிறந்த நாள் விருந்துபசரிப்பில்
வான வெடி உபயோகிப்புக்கு போலிஸ் அனுமதி பெறவில்லை என்ற அவர் விசாரணைக்காக
தனி நபர் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



