
இந்தோனேசிய கபடிப் போட்டியில் மலேசிய அணி பதக்கம் வெல்லும்
இந்தோனேசிய கபடிப் போட்டியில் மலேசிய அணி பதக்கம் வெல்லும்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர்,ஜூன் 10-
கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் மலேசிய அணியினர் கபடு போட்டிக்கு தயாராகி வருவதால் இந்தோனேசியா, பாலியில் நடைபெறும் கபடி போட்டியில் மலேசிய அணி பதக்கம் வெல்லும் என்று மலேசிய கபடி சங்கத்தின் உதவித் தலைவர் அன்பரசன் லெட்சுமணன்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய கபடிப் போட்டி வரும் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தோனேசிய கபடிப் போட்டியில் மலேசிய அணி நிச்சயம் பதக்கம் வெல்லும் என்று மாஹ்சா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விமான டிக்கெட் உதவித் தொகையை பெற்றுக் கொண்ட போது அன்பரசன் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
இந்த கபடிப்போட்டியில் 6 நாடுகள் கலந்துக் கொள்ளவுள்ளன. மலேசியாவைப் பிரதிநிதித்து ஆண், பெண் இரு அணிகள் இப்போட்டியில் களமிறங்கவுள்ளன.
ஏஎஸ்பி அருள், பயிற்றுநர்கள் பழனி, விமல் ஆகியோரின் தலைமையில் மாஹ்சா பல்கலைக்கழகத்தில் போட்டியாளர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வேளையில் பயிற்சிகள் மேற்கொள்ள அனைத்து ஆதரவையும் வழங்கிய மாஹ்சா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அன்பரசன்
தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி, அவரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி உட்பட அனைவருக்கும் தமது நன்றியை புலப்படுத்தினார்.



