Malaysia

மக்களுக்கான உதவியை அதிகரிக்கவே டீசலுக்கான உதவித் தொகை மீட்கப்பட்டது அமைச்சர் ஃபஹ்மி பட்சில் விளக்கம்

கோத்தா கினபாலு, ஜூன் 10-
நாட்டிலர பி40 பிரிவு மக்களுக்கு அதிகமான உதவியை ஏற்படுத்தவே
டீசலுக்கான உதவித் தொகை மீட்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் விளக்கமளித்துள்ளார்.

இந்த உதவித் தொகையை கொண்டு மக்களுக்கு உதவ முடியும். மேலும் இந்த
உதவித்தொகை பொறுப்பற்ற தரப்பினரால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அவ்வாறு செய்யப்பட்டதாக அரசாங்கத் தொடர்பாளருமான ஃபஹ்மி ஃபாட்சில் கூறினார்.

டீசல் கசிவு மற்றும் கடத்தல் காரணமாக ஒரு நாளைக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வரை இழப்பு ஏற்படுவதாக
சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. இந்த தொகையை நிவாரண முயற்சிக்கு பயன்படுத்தலாம் என்று ஃபஹ்மி ஃபாட்சில் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button