InternationalMalaysiaSports

கபடி விளையாட்டாளர்கள் அதிகமாக அனைத்துலக போட்டிகளில் பங்கேற்பதால் அவர்கள் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைக்கு தீர்வுக் காணப்படும் அர்விந்த் அப்பளசாமி உறுதி

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

பண்டார் சௌஜானா புத்ரா, ஜூன் 10-
மலேசிய கபடி சங்கம் பல அனைத்துலகப் போட்டியில் கலந்துக் கொண்டு வருவதால் கபடி விளையாட்டாளர்கள் எதிர்நோக்கும் நிதி பிரச்சினைக்கு உரிய தீர்வுக் காணப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி உறுதியளித்துள்ளார்.

கபடி போட்டிக்கு செல்லும் விளையாட்டாளர்கள் பல்வேறு வகையில் நிதி பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு தீர்வு காண தாம் முயற்சி மேற்கொள்ளவிருப்பதாக போட்டியாளர்களுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வின் போது அர்விந்த் அவ்வாறு கூறினார்.

கபடி விளையாட்டாளர்கள் போட்டிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் நிதி பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் இக்கபடி அணி ஆசியப் போட்டிக்கு செல்லும் போது துணைப் பிரதமர் ஜாஹித் ஹமிடி உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் இக்கபடி அணி தற்போது இந்தோனேசியாவுக்கு செல்கிறது. இதனால் இந்த அணியின் விமான டிக்கெட் செலவை துணைப் பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இவ்வேளையில் துணைப் பிரதமருக்கு அர்விந்த் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நமது பாரம்பரிய விளையாட்டான
கபடி, சிலம்பம் ஆகியவை விளையாட்டுகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
இதில் குறிப்பாக இவ்வணியினர் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைக்கு உதவ பலரும் முன்வர வேண்டும் என்று அர்விந்த் கேட்டுக் கொண்டார்.

மலேசிய அணி அனைத்துலக கபடிப் போட்டியில்
பதக்கம் வெல்லும் பட்சத்தில் கபடி போட்டிக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
அதுவரை அரசாங்கத்தின் முழு உதவிகள் கிடைப்பது சற்று சிரமம்தான் என்றார் அர்விந்த்.

எனினும் இருந்தாலும் கபடி அணிக்கான உதவிகளை தொடரும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேறு வழியில் நிதி திரட்டப்படும் என்று அர்விந்த் அப்பளசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தோனேசிய போட்டிக்கு செல்லும் மலேசிய அணியினர் நிச்சயம் பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும்.
இதனை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அர்விந்த் அப்பளசாமி மேலும் சொன்னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button