
MalaysiaUncategorized
புலி கர்ஜனை. கணவனை புதருக்குள் இழுத்து சென்றதை பார்த்து.மனைவி அதிர்ச்சி
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
கிரிக், அக்.16-
இங்குள்ள பெர்சியா காட்டு பகுதியில் வெட்டு மர நடவடிக்கையை
மேற் கொள்ள இருந்த தனது 54 வயது கணவரை கௌவிய நிலையில் புதருக்குள் இழுத்து சென்ற.கொடூர காட்சியை பார்த்து
தாய்லாந்து பிரஜை மனைவி
செய்வதாறியா நிலைக்கு தள்ளப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் தொழிலாளர் குடியிருப்பு வீட்டின்
கழிவறை ஜன்னல் கதவை திறந்த பின் இந்த கொடூர
காட்சியை பார்த்து
பதற்றம் அடைந்து செய்வதறியா இருந்துள்ளார்.
அன்றைய தினம் காலை 8-25 மணியளவில் இது
சம்பந்தமாக போலிஸ் புகார்
செய்யப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரம் அவரின் உயிரற்ற உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் மீட்டு
மருத்துவமனைக்கு
அனுப்பப்பட்டதாக
பேராக் போலிஸ் தலைவர் டத்தோ ஹாஷிசி மாட் ஹாரிஸ் சொன்னார்



