Malaysia

தான்ஸ்ரீ ஜி.வடிவேலு மறைவு டத்தோஸ்ரீ எம்.சரவணன் இரங்கல்

கோலாலம்பூர், அக்.19-
ம.இ.காவின் மூத்தத் தலைவரும், முன்னாள் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான (1992-1995), முன்னாள் ம.இ.கா பொதுச் செயலாளர்
தான்ஸ்ரீ ஜி. வடிவேலு அவர்களின் மறைவு கட்சிக்கும் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும் என்று ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது இரங்கல் செய்தியில் கூறினார்.

அன்னாரின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினர் அனைவருக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

டான்ஸ்ரீ வடிவேலு அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் காலமானார். அன்னாரது இறுதிச் சடங்கு 20.10.2024 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 12 மணியளவில் No:12, Jalan Bukit Desa 3, Lorong Seputeh,Kuala Lumpur என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button