
Malaysia
குப்பை குவிப்பு. எச்சரிக்கை பலகை அறிவிப்பை துச்சமாக கருதும் பொறுப்பற்றவர்கள்
தேசம் செய்திகள் ந.ஆ.யுவராஜ்
ஈப்போ, ஏப்.9-
குப்பை குவிப்பு வேண்டாம் எனும் அறிவிப்பு பலகை பொறுத்தியும் குப்பை குவியல் பெருகி வருவதாக
பொது மக்கள் குறைப்பட்டு கொண்டனர்.
முக்கியமான சாலை அல்ல என்பதை அறிந்து
வைத்திருப்பதால் பொறுப்பற்றவர்கள் இங்குள்ள ஹாலா ரப்பாட் பாரு 15 எனும் பொது மக்கள் புழங்காத இடத்தில்
குப்பை குவியல் நாளுக்கு நாள் பெருகி வரும் புகார் கிடைத்துள்ளது.



