Malaysia

ஈப்போ‌வில் பிரசித்தி பெற்ற புந்தோங் தேவி ஶ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் 115ஆம் ஆண்டு திருவிழாவில் 10 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பக்தர்கள்

 

ஈப்போ,ஏப்.9-
ஈப்போ‌ வட்டாரத்தில் பக்தர்களிடையே நன்கு பிரசித்தி பெற்ற புந்தோங் தேவி ஶ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் 115 ஆண்டு திருவிழா கோலாக்கலமாக நடைபெற்றது.

தேவி ஶ்ரீ காளியம்மனின் அருளை பெற பக்தர்கள் புடைசூழ திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அக்னி சட்டி, பால் குடம், காவடிகள் என பல நேர்த்திக்கடனை பக்தர்கள் நேர்த்தியாக செலுத்தினர்‌.

அதே வேளையில் பிரதான அறிவிப்பாளர் பூமதி அம்மா அறிவிப்புகள் வழங்க மிகவும் அழகான முறையில் எஸ்.கே. ஈவன் மல்லர்ஸ் நிறூவனத்திர் ஒலி சேவையை தருவித்தனர்.

மக்களுக்கு திருவிழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சனிக்கிழமை காலையில் ஆலயத்திற்கு வருகையளிக்கு பக்தர்கள்‌ எண்ணிக்கை அதிகரித்தது.

எனினும் தேவி ஶ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு ஏதுவாக தயார் நிலையை செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button