
ஒரு குடும்பமே இணைந்து நடத்தும் ஊடகம் Desam Media Group இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சாதனையாளர்களை விருது வழங்கி அங்கீகாரம் வழங்கும் ஊடகம் தேசம் ஊடக குழுமம்
கோலாலம்பூர்,ஜூன் 19-
“தனி ஒருவன் நினைத்து விட்டால், உலகத்தில் தடைகளில்லை” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனிமனிதனாக தேசம் ஊடகத்தை தொடங்கி 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தி இன்று விழா எடுத்து வருகிறார் ஊடகத்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்டுள்ளன குணாளன் மணியம்.
கடந்த 1.1.1990இல் பத்திரிகை துறையில் ஈடுபாடு கொண்டு ஆதிகுமணன் தலைமையில் செயல்பட்ட மலேசிய நண்பன் நாளிதழில் 20 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் 31.9.2009இல் தேசம் ஊடகத்தை தொடங்கினார். தேசம் ஊடகம் இன்று 15ஆவது ஆண்டில் தடம் பதித்துள்ளது.
தனிமனிதனாக ஊடகத்துறையில் செயல்படத் தொடங்கிய போதும் ஒவ்வொரு ஆணினின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் குணாளன் மணியம் அவர்களின் துணைவியார் சரஸ்வதி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று தேசம் குழுமத்தை வழி நடத்தினார்.


இந்த 15 ஆண்டுகளில் எண்ணில் அடங்கா துன்பங்கள், துயரங்கள். எனினும் அனைத்தையும் எதிர்கொண்டு இன்று இன்று மிளிர்ந்து நிற்கின்றனர். ஒரு காலத்தில் தனி ஒருவன். இன்று ஒரு குடும்பமே நடத்தும் ஊடகமாக தேசம் ஊடகம் திகழ்கிறது. கணவன்-மனைவி-பிள்ளைகள் என்று ஒரு குடும்பமே இணைந்து நடத்தும் தேசம் ஊடகம் சாதனையாளர்களை கௌரவிக்கும் ஒரு ஊடகமாகவும் திகழ்கிறது.
தேசம் குழுமத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா 2010இல் தோட்ட மாளிகையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் 10 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு திருவண்ணாமலையில் முதல் முறையாக தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா நடத்தப்பட்டது. இங்கு கிட்டத்தட்ட 70 மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்த து. இதே போன்ற ஒரு விருது விழா மலேசியாவிலும் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
மலேசியாவில் 2017ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதாவது 2017, 2019, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தேசம் விருது விழா நடைபெற்றுள்ளது. மலேசியாவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நோக்கத்தில் விருது விழாவை நடத்திய முதல் ஊடகம் தேசம் ஆகும்.
இந்த விருது விழாவில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், வர்த்தகர்கள், விளையாட்டாளர்கள், சேவையாளர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள் என்று பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023இல் சென்னையில் நடைபெற்ற இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் மலேசியா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான Desam International Icon Award விருது விழா எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி BANDAR SAUJANA PUTRA, MAHSA UNIVERSITY BALLROOM மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



