Malaysia

13 மணிநேரம் தொடர்ந்து உடற்பயிற்சி, எடைதூக்கி உடல்பயிற்சி பயிற்றுநர் பிரபாகரன் சாதனை

 

கோலலிப்பிஸ்,ஜூன் 15–
உடல்பயிற்சி பயிற்றுநர் பிரபாகரன் தேவர் @ டாக்டர் கேஜே (வயது 27) 13 மணி நேரம் உடல்பயிற்சி செய்தும் எடைத் தூக்கியும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

பகாங், லிப்பிஸை சேர்ந்த இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி மறுநாள் காலை 10.30 மணி வரை உடல்பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளார்.

இவரின் இச்சாதனை ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்கான அங்கீகாரத்தை அதன் தலைவர் செல்வராணி முத்தையா பிரபாகரனுக்கு வழங்கினார்.

இச்சாதனையை புரிய கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இச்சாதனையை படைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நாட்டிற்கும் குறிப்பாக பகாங் மாநிலத்திற்கு பெருமையை சேர்த்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாக பிரபாகரன் சொன்னார்.

இச்சாதனையை புரிய என்னுடைய தாயார் எஸ்.சுகுணாமலரும் (வயது 66) நண்பர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

அடுத்த முயற்சியாக வரும் செப்டம்பர் மாதத்தில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் 12 மணிநேரம் உடற்பயிற்சி செய்து influencer book of world record மற்றும் Malaysia book of record சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button