Malaysia

பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்!

கோலாலம்பூர் டிச.17–
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் பிறந்த நாள் விழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ம இகா நேதாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்பதியர் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

ம.இ.கா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களான டான்ஸ்ரீ நெல்சன், டத்தோ அசோஜன், தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் குமரராஜா ஆகியோரும் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

ம இகா மாநிலத் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்களும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாலைகள் அணிவித்தனர்.

ம.இ.கா தலைவர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிறந்த நாள் விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button