Malaysia

இந்திய சமுதாயத்தின் ஆதரவு மீண்டும் ம இகா பக்கம் திரும்பியுள்ளது! டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பெருமிதம்

கோலாலம்பூர் டிச.17-
அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் எந்தவொரு பதவிகள் இல்லை என்றாலும் இந்திய சமுதாயத்திற்கு நிறைவான சேவையை ம இகா தொடர்ந்து வழங்கி வருகிறது என்று அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் ஆதரவு மீண்டும் ம இகா பக்கம் திரும்பி உள்ளது என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது என்று ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்கு ஒரு சக்தி வாய்ந்த கட்சி ம இகாவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.

ஆகவே மஇகாவை இன்னும் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக விளங்கிட நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ம இகா பெரும் அளவில் சேவையாற்றி வருகிறது.

கெடாவில் Amist பல்கலைக்கழகத்தில் மூலம் ம இகா இந்திய மாணவர்களின் கல்விக்கும் பெரும் அளவில் ம இகா உதவிகளை வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் Amist பல்கலைக்கழக மண்டபத்தில் கெடா மாநில அம்னோ பேரவை விமரிசையாக நடைபெற்றது.

மாநாட்டை நடத்திய கெடா அம்னோ தலைவர்கள் இந்த ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை பார்த்து பாராட்டினார் என்று அவர் சொன்னார்.

இன்று ம இகா நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற தமது பிறந்த நாள் விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button