Malaysia

பினாங்கில் ஜாலான் சுல்தான் அகமட் ஷா, திறந்தவழி பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் சுவாரஞ்சலி கர்நாடக இசைநிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு நடைபெறும்

பினாங்கு, டிச.17-
பினாங்கு கர்நாடக ரசிகர்களுக்காக “சுவாரஞ்சலி” எனும் இந்திய பாரம்பரிய கர்நாடக இசைநிகழ்ச்சி பினாங்கு ஜாலான் சுல்தான் அகமட் ஷா, திறந்தவழி பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில்
டிசம்பர் 20ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இசைநிகழ்ச்சியில் பிலபல கலைஞர் சமுவேல் ஜே.தாஸ் சித்தார் இசைக்கருவியுடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். மேலும் ஸ்வேதா பிரேம்குமார் (விணை) பிரகாஷ் கந்தசாமி (தபேலா) முத்துராமன் கணேசன் (மிருதங்கம்) அர்வின் ஷர்மா (கஞ்ஜிரா) ஆகியோர் தங்கள் இசைக கருவிகளுடன் ரசிகர்களை இசைமழையில் நனயவைக்கவுள்ளனர் என்பது திண்ணம்.

இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ticket2u.com தளத்தில் வாங்கி ஆதரவு தரும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர். தொடர்புக்கு 018-5791312.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button