Malaysia

கல்வியாளர்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்திய சமூக மேம்பாட்டிற்கு பேருதவியாக திகழ்வார்கள்.

ஈப்போ, ஜன.12-
பேராக் மாநில மஇகா தலைவர் தான் ஸ்ரீ எம். ராமசாமி, மாநில மஇகா துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களுடன் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் சந்திப்பினை மாநில ம.இ.கா அலுவலகத்தில் தலைமை தாங்கி வழி நடத்தினார். இச்சந்திப்பில் நியமிக்கப்பட்ட அனைத்து துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களும் பங்கேற்றதற்கு அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

கூட்டடத்தில் அனைத்து துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு குறித்து விவரிக்கப்பட்டது. தான்ஸ்ரீ அப்பொறுப்பாளர்களுடன் வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் பங்கேற்று மாநில ம.இ.காவின் நோக்கங்களும் திட்டங்களும் பலமாக நிறைவேற ஆதரவளித்த துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களுக்கு தான் ஸ்ரீ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்த துணைக்குழுக்கள் வாயிலாக மாநில இந்தியர்கள் நலனுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுவதுடன், அரசாங்க சலுகைகள் முறையாக சமுதாயத்தைச் சென்றடைவதையும் உறுதி செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த துணைக்குழுக்களில் பேராக் மாநிலத்தில் பணியாற்றிவரும் கல்வியாளர்கள் மற்றும் ஒரு சில துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நபர்கள் கலந்துக்கொண்டு தங்கள் ஆதரவினை முழுமையாக வழங்க முன்வந்துள்ளனர். இவர்களின் சேவை மற்றும் சமூக ஈடுபாடு நம் இந்திய சமுதாயத்திற்கு பேருதவியாக இருக்கும் என்று தான்ஸ்ரீ எம்.இராமசாமி மிகவும் நம்பிக்கையுடன் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button