Malaysia

ஏரா எஃப் எம் அறிவிப்பாளர்கள் மூவர் தற்காலிக பணி நீக்கம் ஆஸ்ட்ரோ நிர்வாகம் மன்னிப்பு கோரியது

 

கோலாலம்பூர், மார்ச் 3-
தைப்பூசத்தின் போது இந்துக்கள் மேற்கொள்ளும்
வேல் வேல் என்ற முழக்கங்களை சமூகவலைத்தலத்தில் பதிவிட்டு இழிவுபடுத்திய மூன்று அறிவிப்பாளர்களை ஆட்ஸ்ரோ நிர்வாகம் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அந்த மூன்று அறிவிப்பாளர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்கள் பொதுவில் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். எனினும் அம்மூவரையும் இடைநீக்கம் செய்வதாக ஏரா வானொலி நிர்வாகம் கூறியது.

ஒளிபரப்பு துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அஸ்ட்ரோ ரேடியோ இந்த சம்பவத்தைக் கடுமையாக கருதுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட மூவரையும் இடைநீக்கம் செய்கிறோம் என்று அஸ்ட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.

இந்த மூன்று அறிவிப்பாளர்கள் இதர சிலருடன் சேர்ந்து 3 PAGI ERA நிகழ்ச்சியில் காவடி ஆட்டத்தை வேல் வேல் என்ற முழக்கங்களை எழுப்பி தைப்பூசத்தை கேலி செய்தனர்.

இந்த காணொளி சமூக வலைத்தலங்களில் வைரலானது. இந்த தொடர்பில் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி விசாரணை மேற்கொள்ளும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button