Malaysia

மஸ்ஜிட் இந்திய அருள்மிகு தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் ஆலய நிர்வாகம் இதே இடத்தில் இருக்க உறுதி பிரதமரின் கவனத்திற்கு முடிவை கொண்டு செல்வேன் துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் அறிவிப்பு

 

தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர்
ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர் மார்ச் 20-
நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள மஸ்ஜித் இந்தியா அருள்மிகு தேவி௰ வீர பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் ஆலயத்தின் முடிவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் பார்வைக்கு கொண்டு செல்லவிருப்பதாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் கூறினார்.

நாட்டில் மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு ஆலயமும் உடைபடாது. கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் 130 ஆண்டுக்கால வரலாற்றை கொண்டதாகும். இவ்வாலயம் அமைந்துள்ள நிலம் தற்போது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதானதால் அவர்களிடம் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

இந்த நிலத்தில் பள்ளிவாசல் கட்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த பிரச்சினை நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இலக்காக உள்ளதாக டத்தோஸ்ரீ இரமணன் சொன்னார்.

பிரதமரின் வலியுறுத்தலின் பேரில் நான் இந்த ஆலயத்திற்கு வந்திருக்கிறேன்.
ஆலய நிர்வாகத்துடன் சமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதே வேளையில் பொதுமக்களும் பல கோரிக்கைகளை என்னிடம் முன்வைத்தனர்

இந்த ஆலயம் இதே இடத்தில் நிலை நிறுத்தப்பட்ட வேண்டும் என்பது தான் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் மடானி அரசாங்கம் எந்தவொரு கோவிலையும் உடைக்க அனுமதிக்காது. இதற்கான வாக்குறுதியை நான் வழங்குகிறேன் என்றார் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன்.

ஆலய நிர்வாகம் என்னிடம் ஆலயம் இதே இடத்தில் இருக்க அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் உறுதியளித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button