
செகாமாட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் உருவச்சிலை திறப்பு விழா
சிகாமாட், மார்ச் 20- செகாமாட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் திருவள்ளுவர் உருவச்சிலை மார்ச் 22 சனிக்கிழமை காலை மணி 9.00மணியளவில் திறப்பு விழா காணவுள்ளது.
பொய்யாமொழிப் புலவர், தெய்வப்புலவர் என்று அழைக்கப்படும் தமிழ் மொழியின் பொக்கிஷம் திருவள்ளுவர் என்றால் அது மிகையாகாது.
பொதுவாகவே பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளிவரின் சிலை வைப்பது ஒரு வழக்கம்.
ஏனெனில், தமிழ் மொழியின் சிறப்பை காட்டுவதோடு, திருவள்ளுவரின் உருவச்சிலை வைத்தாலே அந்தப் பள்ளி ஒரு புது பொலிவைப் பெரும். அந்த வகையில் செகாமாட் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமர் துரை கூட்டரசு பிரதேச அமைச்சருமாகிய டத்தோ ஸ்ரீ Dr. Zaliha Mustafa அவர்களின் ஆதரவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஒன்று எதிர்வரும் 22/03/2025 திகதி சனிக்கிழமை காலை மணி 9.00மணியளவில் நடைப்பெறவுள்ளது.
செகாமாட் சுற்றுவட்டார மக்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு செகாமாட் தோட்ட பள்ளிமேம்பாட்டு வாரியமும், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் கேட்டுக்கொள்கிறது.



